திருமணத்திற்கு மறுப்பு: நெருப்போடு காதலியைக் கட்டிப்பிடித்த காதலன்!

Attempted Murder Maharashtra Relationship
By Sumathi Nov 22, 2022 07:39 AM GMT
Report

பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்ட காதலன், காதலியையும் கட்டிப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் விவகாரம்

மகாராஷ்டிரா, அவுரங்காபாத்தில் அரசு அறிவியல் கழகம் உள்ளது. அங்கு உதவிப் பேராசிரியரைக் காண பூஜா சால்வே(28) என்ற மாணவி வந்துள்ளார். அப்போது கங்காகேட்டைச் சேர்ந்த கஜனன் முண்டே(30) என்ற மாணவர் ஒருவரும் வந்துள்ளார். இவர் பிஹெச்டி படித்து வந்தார்.

திருமணத்திற்கு மறுப்பு: நெருப்போடு காதலியைக் கட்டிப்பிடித்த காதலன்! | A Man Burning Fire Rage To Girlfriend Maharashtra

இந்நிலையில், அறையின் கதவை மூடிய கஜனன், என்னை ஏன் திருமணம் செய்ய மறுக்கிறாய் எனக் கேட்டு கொண்டே இருவர் மீதும் பெட்ரோலை ஊற்றியுள்ளார். தொடர்ந்து லைட்டரால் தன் மீது தீயைப் பற்ற வைத்த கஜனன், அந்தப் பெண்னையும் கட்டிப்பிடித்துள்ளார். இதில் இருவரும் தீப்பிடித்து எரிந்தனர்.

காதலன் வெறிச்செயல்

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த ஊழியர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது இருவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், கஜனன் முண்டேவும், பூஜா சால்வேயும் காதலித்து வந்துள்ளனர்.

திருமணம் செய்ய கஜனன் வலியுறுத்திய போது, அதை சால்வே மறுத்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்து அவர் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று விசாரித்து வருகின்றனர். பெண்னின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அரசு அறிவியல் கழக இயக்குநர் ராஜேந்திர சத்புடே கூறிகையில், " பூஜா சால்வே எங்களின் 2004-2005ம் ஆண்டு மாணவர். எங்கள் இன்ஸ்டியூட் உதவி பேராசிரியையான வைஷாலி வடேகரைச் சந்திக்க பூஜா சால்வே நேற்று வந்தார். இந்த நிலையில் தான் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது" எனக் கூறியுள்ளார்.