ஆண் நண்பருடன் அடிக்கடி... ஆத்திரத்தில் மனைவியை கொன்று தானும் தற்கொலை!
செல்போனில் பேசிய மனைவியை அடித்துக் கொன்று, கணவன் தானும் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத் தகராறு
உத்தரப்பிரதேசம், தல்கடோராவில் உள்ள கேதன் விஹாரைச் சேர்ந்தவர் குல்வந்த்சிங்(43). இவரது மனைவி புஷ்பாசிங்(38). இவர்களுக்கு சரத், அனிருத் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இவரும் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தனர்.

மாலையில் வீடு திரும்பிய போது அவர்களது தாய் புஷ்பாசிங் ரத்த வெள்ளத்தில் இறந்துக் கிடந்தார். மற்றொரு அறையில், தந்தை தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனைவி அடித்துக் கொலை
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், இருவரது உடல்களையும் மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சரத்திடம் போலீஸாரிடம் விசாரணை நடத்திய போது, தனது தாய் அவரது ஆண் நண்பருடன் அடிக்கடி செல்போனில் பேசுவார்.
இதை எனது தந்தை கண்டித்தார். ஆனால், அதையும் மீறி தாய் செல்போனில் பேசி வந்தார் என்று கூறினார். இதுகுறித்து, தல்கடோரா காவல் துறை அதிகாரி ரிகேஷ் குமார் சிங் கூறுகையில்," ஆண் நண்பருடன் தனது மனைவி அடிக்கடிசெல்போனில் பேசுவதை குல்வந்த் சிங் கண்டித்துள்ளார்.
நேற்று அது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சணையில் மனைவியை அடித்துக் கொலை செய்து விட்டு குல்வந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார்” என்றார். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.