காப்பகத்தில் மனநலம் குன்றிய சிறுவனை அடித்து கொன்று புதைத்த கொடூரம்? - எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதால் அதிர்ச்சி!!
தஞ்சாவூர் அருகே பேராவூரணி அருகே மன நல காப்பகத்தில் 15 வயது சிறுவனில் எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினத்தில் ஷேக் அப்துல்லா என்பவர் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக அவிசோ மன நல காப்பகம் என்ற பெயரில் காப்பகம் ஒன்றை நடத்தி வருகின்றார்.
இவரது இரண்டாவது மனைவி கலீமா பீவி, தன்னுடைய கணவர் ஷேக், காப்பகத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய சிறுவர்களை கொடுமைப்படுத்துவதாகவும், கடந்த 2019-ம் ஆண்டு திருப்பூரை சேர்ந்த அக்பர் என்ற 15 வயது சிறுவனை அடித்து கொன்று காப்பகத்திற்குள்ளே புதைத்ததாகவும் முதலமைச்சரின் தனி பிரிவுக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இது குறித்து விசாராணை மேற்கொண்ட போலீசார், தனிப்படை அமைத்து காப்பகத்திற்கு விரைந்தனர். கலீமா உதவியுடன் சிறுவன் புதைக்கப்பட்ட இடத்தை போலீசார் தோண்டி ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் சிறுவனின் எலும்புகளும், மண்டை ஓடுகளும் இருந்துள்ளது. இதனை கைப்பற்றிய தடயவியல் நிபுணர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து காப்பக உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டதில், கலீமா தன்னை விட்டு வேறு ஒருவருடன் சென்றதாகவும், அதனால் என்னை பழிவாங்குவதற்கு நாடமாடுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், திருப்பூரை சேர்ந்த அக்பர் என்ற சிறுவன் கடந்த 10 வருடமாக காப்பகத்தில் வளர்ந்து வந்ததாகவும், சிறுவனுக்கு கடந்த 2019-ம் ஆண்டு தொண்டை அடைப்பு நோய் ஏற்பட்டு இறந்து விட்டதாகவும் கதை கூறியுள்ளார்.
இதனால்
சிறுவனை நீங்களே அடக்கம் செய்துவிடுங்கள் என்று கூறியதால் காப்பகத்திலேயே
அடக்கம் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை தொடர்ந்து போலீசார், அக்பரின் உறவினர்களிடம் விசாரணை
மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.