ரேசன் அட்டைதாரர்களுக்கு ஓர் நற்செய்தி..! இனி நீங்கள் கையில் பணம் எடுத்துச் செல்ல தேவையில்லை
ரேசன் கடைகளுக்கு செல்லும் அட்டைதாரர்கள் இனி கையில் பணம் எடுத்துச் செல்ல வேண்டிய தேவையின்றி கியூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் நடைமுறையை காஞ்சிபுரத்தில் முதன் முதலாக தொடங்கப்பட்டுள்ளது.
ரேசன் கடைகளில் அறிமுகப்படுத்தப்படும் நவீன் தொழில்நுட்பங்கள்
ரேசன் கடைகளில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. முறைகேடுகளை தடுக்க கைரேகை வைத்தால் தான் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
மேலும் ரேசன் கார்டுகளில் பெயர் சேர்த்தல் அல்லது நீக்கம் செய்தல் ஆகியவை ஆன்லைன் மூலம் செய்யப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து ரேசன் கடைகளில் மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் கூடுதலான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ரேசன் கடைகளில் கேழ்வரகு வழங்கப்பட உள்ளது.
நடைமுறையில் ரேசன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களுக்கு ரேசன் அட்டைதாரர்களிடம் இருந்து கையில் ரொக்கமாக பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் நடைமுறை அறிமுகம்
இதையடுத்து ரேசன் அட்டைதாரர்கள் கியூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்த கோரிக்கை வைத்து வந்த நிலையில் அரசு பரிசீலித்து வந்தது.
இந்த நிலையில் விரையில் ரேசன் கடைகளில் கியூ ஆர் கோடு மூலம் அதாவது யுபிஐ மூலம் பணப்பரிவர்தனை செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்திருந்தது.
தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் மின்னணு பரிமாற்றம் (கியூ ஆர் கோடு) மூலம் பணமற்ற பரிவர்த்தனை நடைமுறைப்படுத்தும் திட்டம் தொடங்கி உள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட டெம்பிள் சிட்டியில் உள்ள எம்.வி.எம்.பி நகர் ரேசன் கடையில் சென்னை, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார்.
இந்த நடைமுறை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 602 ரேசன் கடைகளில் அமல்படுத்தப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.