ரேசன் கடைகளில் வாங்காத பொருட்களுக்கு பில் போட்டால் இனி அவ்வளவு தான் - அரசு எச்சரிக்கை
சேரன் அட்டைதாரர்களுக்கு இனி வாங்காத பொருளுக்கு மெசேஜ் வருகிறதா அப்போ கவலை வேண்டாம் இதோ அரசு வெளியிட்ட முக்கிய தகவல்
தொடர்ந்து வந்த புகார்கள்
இந்தியா முழுவதும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரசு நியாய விலை கடைகளில் அரிசி,கோதுமை, சர்க்கரை, மைதா, உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் துவரம் பருப்பு, ஆயில், உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் அண்மைகாலமாக வாங்காத பொருட்களுக்கு நியாய விலை கடை பணியாளர்கள் பில் போடுவதாக புகார் எழுந்து வந்தது.
அரசு சுற்றறிக்கை
இதையடுத்து கூட்டுறவுத்துறை பதிவாளர் சுற்றறிக்கை ஒன்றை அனைத்து நியாய விலை கடைகளுக்கும் அனுப்பியுள்ளார்.
அதில் நியாய விலை கடைகளில் வாங்காத பொருட்களுக்கு குடும்ப அட்டைகளுக்கு பில் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வாங்காத பொருட்களுக்கு பில் போட்டால் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை பதிவாளர் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளார்.