6 வருடமாக... சிறுமிக்கு நேர்ந்த கொடுமையால் விபரீத முடிவு! நடந்தது என்ன?
தந்தையால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 15 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை முயற்சி
மணிப்பூர் மாநிலம், இம்பாலில் 15 வயதான சிறுமி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு அருகில் இருந்த 'ஜவஹர்லால் நேரு' மருத்துவ அறிவியல் கழகத்தில் அனுமதித்துள்ளனர்.
முதற்கட்ட சிகிச்சைக்கு பிறகு சிறுமியை வேறு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாரு அங்கிருந்த மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டது. அதனையடுத்து சிறுமியை மேல் சிகிச்சைக்காக வேறு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிறுமி உயிரிழப்பு
இதைத் தொடர்ந்து சிறுமியின் தற்கொலை முயற்சி பற்றி காவல்நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிறுநீரகம் தொடங்கி ஒவ்வொரு உறுப்பாக சிறுமிக்கு செயலிழந்து அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து விசாரித்த காவல் அதிகாரிகளுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அந்த விசாரணையில் 15 வயதான சிறுமியின் தந்தை கடந்த 6 ஆண்டுகளாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார் எனவும் இதை வெளியில் கூறக்கூடாது என்றும் மிரட்டியது தெரியவந்துள்ளது.
பாலியல் வன்கொடுமை
இறுதியாக சிறுமி தன் தந்தையிடம் தான் உறைவிட பள்ளியில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன் என கேட்டதற்கு அவர் அனுமதி கொடுக்கவில்லை. இச்சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் சிறுமியின் தந்தையை கைதுசெய்து விசாரிக்கப்படுவதாக கூறியுள்ளனர் .
இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரி, ``குற்றப்பத்திரிகை விரைவில் சமர்ப்பிக்க எங்களால் முடிந்ததைச் செய்வோம். சிறுமி தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை தன் நெருங்கிய இரண்டு நண்பர்களிடம் கூறியிருப்பதாகவும் தனது டைரியில் குறித்து வைத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
டைரியை இன்னும் கண்டுபிடிக்கவில்லை, அதைத் தேடிவருகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.