வேலை கிடைத்ததற்காக ட்ரீட் கொடுத்த தோழி; துரோகம் செய்த நண்பர்கள் - இறுதியில் நேர்ந்த கொடூரம்!
தோழியை சிறு வயது நண்பர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சி அளித்துள்ளது.
தோழி
ஐதராபாத்தில் சாப்ட்வேர் நிறுவனத்தில் தனக்கு வேலை கிடைத்தததற்காக நண்பர்களுக்கு ட்ரீட் வைத்த 24 வயதுப் பெண் அவர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதில், தனக்கு புதிதாக சாப்ட்வேர் கம்பெனியில் வேலை கிடைத்தற்காக தன்னுடன் 2 வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளியில் படித்த,
நேர்ந்த கொடூரம்
சிறு வயது நண்பனுக்கும் அவனின் உறவினனுக்கும் நேற்று முன்தினம் திங்கள்கிழமை இரவு வனஸ்தலிபுரத்தில் உள்ள பாருடன் கூடிய ரெஸ்ட்டாரெண்டில் பார்ட்டி வைத்தேன். அங்கு மூவரும் மதுவருந்திய நிலையில்,
தன்னை அருகில் உள்ள ஹோட்டல் அறைக்கு அழைத்து சென்று அவர்கள் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டுத் தப்பியோடினர் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஹோட்டல் அறையில் இருந்து தனது அண்ணனுக்கு போனில் அழைத்து தனக்கு நடந்த கொடுமைகளை அந்த பெண் கூறியுள்ளார்.
அதன்பிறகு, அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், தப்பியோடிய பெண்ணின் நண்பனை போலீசார் தீவிரகிமாக தேடிபிடித்து, கைது செய்துள்ளனர்.