ஒரு கும்பல்...11 நாட்கள் - பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி தூவி சித்ரவதை!

Telangana Hyderabad Crime
By Swetha Jun 25, 2024 02:30 PM GMT
Report

பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி தூவி சித்தரவதை செய்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

11 நாட்கள் சித்ரவதை

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகில் உள்ள நாகர்கர்னூல் கிராமத்தை சேர்ந்தவர் அந்த இளம்பெண்(27). அவருக்கும் அவரது சகோதரி குடும்பத்தினருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததுள்ளது. இதனிடையே இளம்பெண், அந்த இடத்தின் உரிமையாளர் பாண்டி வெங்கடேசனிடம் கடன் வாங்கியுள்ளார்.

ஒரு கும்பல்...11 நாட்கள் - பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி தூவி சித்ரவதை! | A Gang Tortured The Girl For 11 Days

அந்தக் கடனை அடைக்க அவரது பண்ணையில் இளம்பெண் வேலை செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், தன் அக்கா மீது உள்ள கோபத்தால் இளம்பெண் வேலைக்குச் செல்லவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரி மற்றும் அவரது கணவர்,

இடத்தின் உரிமையாளர் பாண்டி வெங்கடேசன் ஆகியோர் அவரைத் தடி கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். அதோடு, அவரின் கண்கள், முகம், மற்றும் அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி போட்டு சித்ரவதை செய்துள்ளனர்.அதுமட்டுமின்றி, இளம்பெண் மீது டீசலை ஊற்றி தீவைத்தனர்.சுமார் 11 நாட்களாக அவர் சித்வதை செய்யப்பட்டுள்ளார்.

இளம்பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்;அடித்து சித்திரவதை செய்த 4 பேர் கைது!

இளம்பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்;அடித்து சித்திரவதை செய்த 4 பேர் கைது!

மிளகாய் பொடி 

இந்த விஷயம் தாமதமாக போலீஸாருக்குத் தெரிய வந்துள்ளது. இந்த தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இதில் தொடர்புடைய லிங்கசாமி,

ஒரு கும்பல்...11 நாட்கள் - பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி தூவி சித்ரவதை! | A Gang Tortured The Girl For 11 Days

லட்சுமி, பாண்டி வெங்கடேஷ், பாண்டி சிவம்மா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளம்பெண்ணை, தெலங்கானா துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்கா சந்தித்து ஆறுதல் அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், " இளம்பெண்ணின் அனைத்து மருத்துவச் செலவையும் அரசு ஏற்கும் என்றதுடன், இளம்பெண்ணுக்கு சொந்த வீடு இல்லையென்றால் அவருக்கு வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அரசு வழங்கும் என்றார். மேலும் அவரது குழந்தைகள் அரசு சமூக நலப்பள்ளியில் கல்வி கற்பதோடு விவசாயத்திற்குத் தேவையான நிலமும் வழங்கப்படும்" என்றார்.