வெறித்தனமான fan போல...டெல்லியில் இருந்து சைக்கில் பயணம்; சேப்பாக்கத்திலே தங்கிட்டாராம்!
தோனியின் தீவிர ரசிகர் ஒருவர் டெல்லிலிருந்து சைக்கிளில் பயணித்து சென்னை வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சைக்கில் பயணம்
டெல்லி புறநகர் பகுதியில் வசிப்பவர் கவுரவ். இவர் கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகர். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியை காணவும் தோனியை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் இருந்துள்ளார். ஆனால் இவரிடம் அதற்கான பொருளாதார வசதி இல்லை.
இருப்பினும் இவரது விருப்பத்தை தெரிந்த நண்பர்கள் அவருக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டிக்கு டிக்கெட் வாங்கித் தந்துள்ளனர். அதை எடுத்து கொண்டு டெல்லியில் இருந்து சைக்கிளில் புறப்பட்டு 23 நாட்கள் பயணித்து மைதானம் வந்தடைந்தார் கவுரவ்.
வெறித்தனமான fan
கடந்த ன்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையேயான லீக் போட்டியை ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் கவுரவும் கண்டு களித்தார். அதில் சென்னை அணி வெற்றி பெற்றது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. முடிந்ததும் ஊருக்கு திரும்ப செல்லாமல் தோனியை நேரில் சந்தித்த பிறகே,
டெல்லி செல்வேன் என்று கூறி சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியே தங்கிவிட்டார். மைதானத்தின் 9 வது கேட் நுழைவு பகுதியில் கூடாரம் அமைத்து அவர் இரண்டு நாட்களாக தங்கி வருகிறார். தோனியை எப்படியாவது நேரில் சந்திக்க வேண்டும் என்று அவர் எடுக்கும் இந்த முயற்சி கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.