சாலையோரம் நின்ற கார்..ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலம் -கொலையா? தற்கொலையா?

Tamil nadu Death Pudukkottai Salem
By Swetha Sep 25, 2024 12:30 PM GMT
Report

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்..

புதுக்கோட்டை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நமனசமுத்திரம் என்னும் பகுதிக்கு அருகே சாலையோரமாக ஒரு கார் நீண்ட நேரமாக நின்றுகொண்டிருந்தது.

சாலையோரம் நின்ற கார்..ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலம் -கொலையா? தற்கொலையா? | A Family Found Dead Inside A Car Near Pudukottai

இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், காரை சோதனை செய்து பார்த்ததில் அதில் 2 பெண்கள் உள்பட 5 பேர் சடலமாக கிடந்தனர்.

இதையடுத்து, உடல்களைக் கைப்பற்றி நடத்திய விசாரணையில், 5 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மை தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது குடும்பத்தினர் என்பதும்,

இளைஞர் சடலத்துடன் பாம்பை உயிருடன் வைத்து எரித்த மக்கள்- பின்னணி என்ன?

இளைஞர் சடலத்துடன் பாம்பை உயிருடன் வைத்து எரித்த மக்கள்- பின்னணி என்ன?

5 பேர் சடலம்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. அதற்கு ன்னதாக அவர்களிடமிருந்து ஒரு கடிதத்தை போலீஸார் கைப்பற்றியிருந்தனர்.

சாலையோரம் நின்ற கார்..ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலம் -கொலையா? தற்கொலையா? | A Family Found Dead Inside A Car Near Pudukottai

அதில் மணிகண்டன் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு

கைரேகை உள்ளிட்ட ஆதாரங்களை பதிவு செய்து கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.