பாடம் எடுத்து கொண்டிருந்த ஆசிரியை - பள்ளிக்குள் புகுந்து பளார் விட்ட நபர் !
மதுபோதையில் அரசுப்பள்ளிக்குள் புகுந்த ஒருவர், ஆசிரியையை தாக்கிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
போதை ஆசாமி
புதுக்கோட்டை, ஆலங்குடியில் உள்ள மாருதி நகரைச் சேர்ந்தவர் ஆசிரியை சித்ரா தேவி. இவர் அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல் பள்ளிக்கு வேலைக்கு சென்று வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு திடீரென போதயில் இருந்த ஒருவர் பள்ளிக்குள் புகுந்து வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியையின் கன்னத்தில் அறைந்ததோடு, கொலை மிரட்டல் விடுத்து அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.
ஆசிரியை மீது தாக்குதல்
சம்பவத்தின் போது, பள்ளியிலும் படிக்கும் 26 மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியை உடனிருந்துள்ளனர். அதன்பின் அங்கு வந்தவர்கள் வலுக்கட்டாயமாக தாக்கிய அந்த நபரை தூக்கி வெளியேற்றினர். அதனைத் தொடர்ந்து,
இது தொடர்பாக ஆசிரியை சித்ராதேவி வடகாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், வாணக்கன்காட்டைச் சேர்ந்த சித்திரைவேல் என்பது தெரியவந்தது.
மேலும் அரசு பள்ளி வகுப்பறைக்குள் புகுந்த ஆசாமி ஆசிரியையை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.