தொடர்ந்து பல நாட்களாக சிறுமியை மிரட்டி வன்கொடுமை செய்த 4 பேர் கைது
அரியலூர் அருகே சிறுமியை மிரட்டி தொடர்ந்து வன்கொடுமை செய்த 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் 15 வயது சிறுமியை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரஞ்சித், விஜய், ரமேஷ், சத்யராஜ் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக பல நாட்களாக 15 வயது சிறுமியை மிரட்டி வன்கொடுமை செய்துள்ளனர்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.
இவர்கள் 4 பேரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி குற்றவாளிகள் 4 பேரையும் ஒரு வருடம் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.