ரூ.3 லட்சத்திற்கு ஏலம் போன ஒற்றை தேங்காய் - கந்தசஷ்டி விழாவில் நடந்த அதிசயம்!

Parigarangal Theni Murugan
By Vidhya Senthil Nov 08, 2024 03:30 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in கோவில்
Report

  கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு அனைத்து முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

  கந்தசஷ்டி விழா

முருகன் கோவில்களில் நடைபெறும் விழாக்களில், மிகவும் முக்கியமானது கந்தசஷ்டி விழா. சூரபத்மனைச் சுவாமி ஜெயந்தி நாதர் வதம் செய்த புராணச் சிறப்பு வாய்ந்த தலம் என்பதால் திருச்செந்தூரில் நடைபெறும் கந்தசஷ்டி விழா சிறப்பு வாய்ந்தது.

சூரசம்ஹாரம்

அதன்படி, இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா கடந்த 2-ந்தேதி தொடங்கியது.இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது.

இந்த பழக்கங்கள் உங்ககிட்ட இருக்கா? மோசமான விளைவை ஏற்படுத்தும் - எச்சரிக்கும் ஜோதிடம்!

இந்த பழக்கங்கள் உங்ககிட்ட இருக்கா? மோசமான விளைவை ஏற்படுத்தும் - எச்சரிக்கும் ஜோதிடம்!

 ஒற்றை தேங்காய்

அந்த வகையில் தேனி மாவட்டம் போடியில் உள்ள 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த பால சுப்பிரமணியன் கோவிலில் சூரசம்ஹாரம் நடத்தப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டர்.சூரசம்ஹாரத்தைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் முருக பெருமாள் எழுந்தருளினார் .

ரூ.3 லட்சத்திற்கு ஏலம் போன ஒற்றை தேங்காய்

தொடர்ந்து இன்று முருகனுக்குத் திருக்கல்யாணம் விமர்சையாக நடந்தது. அப்போது திருக்கல்யாண வைபவத்தில் வைக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது.அந்த தேங்காயை போட்டியைச் சேர்ந்த முருக பக்தர் ஒருவர் ரூ.3 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்து வாங்கி சென்றார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.