பிரபல துணிக்கடையில் உடை மாற்றும் அறையில் மறைத்து வைக்கப்பட்ட செல்போன் - கூச்சலிட்ட பெண்..!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் துணிக்கடையில் உடை மாற்றும் அறையில் செல்போன் மறைத்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உடை மாற்றும் அறையில் செல்போன்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுாரில் உள்ள டிரெண்ட்ஸ் என்ற துணிக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இரு பெண்கள் துணி வாங்க வந்துள்ளனர்.
பின்னர் தாங்கள் எடுத்த துணிகளை உடை மாற்றும் அறைக்கு சென்று அளவு பார்த்துள்ளனர். அப்போது ஏசி துளையில் செல்போன் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.
செல்போனை பறிமுதல் செய்த போலீசார்
இதனை கண்டு அருகில் இருந்த பெண் ஒருவர் வேகமாக சென்று செல்போனை எடுத்துள்ளார். இதை பார்த்த கடை பணியாளர்கள் அந்த பெண்ணை பிடித்துள்ளனர்.
இதையடுத்து திருக்கோவிலுார் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் அங்கு வந்த போலீசார் செல்போனை பறிமுதல் செய்தனர். அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.