பிணத்தை வைத்து வங்கியில் பணத்தை பெற முயன்ற பெண் - வைரலாகும் அதிர்ச்சி Video!

Viral Video Brazil Death World
By Jiyath Apr 20, 2024 12:07 PM GMT
Report

பெண் ஒருவர்  இறந்தவரை வங்கிக்கு அழைத்து சென்று கடன் பெற முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடன் பெற முயற்சி 

பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு பெண் தனது 68 வயதான உறவினர் ஒருவரை கடன் பெறுவதற்காக சக்கரநாற்காலியில் அழைத்து வந்துள்ளார். இவர் அந்த ஆணின் மருமகள் என்று கூறி அவர் பெயரில் கடன் பெற முயன்றுள்ளார்.

பிணத்தை வைத்து வங்கியில் பணத்தை பெற முயன்ற பெண் - வைரலாகும் அதிர்ச்சி Video! | A Brazil Women Brought The Deceased To The Bank

ஆனால், அந்த நபர் வரும்போதே தலை தொங்கியபடி இருந்துள்ளார். இதனால் கையெழுத்துப் போடும்போது அவர் மரணமடைந்ததுபோல ரியோ டி ஜெனிரியோ வங்கி ஊழியர்கள் கருதியுள்ளனர்.

பள்ளியில் வைத்தே வீடியோவில் சிக்கிய ஆசிரியை - ஆத்திரத்தில் செய்த காரியம்!

பள்ளியில் வைத்தே வீடியோவில் சிக்கிய ஆசிரியை - ஆத்திரத்தில் செய்த காரியம்!

இறந்த நபர் 

இதனையடுத்து அவசர உதவி சேவை மையத்தைத் தொடர்புகொண்ட வங்கி ஊழியர்கள் அவர்களை உதவிக்கு அழைத்தனர். உடனடியாக அவர்கள் வந்து சக்கரநாற்காலியில் இருந்தவரை பரிசோதித்துள்ளனர். அப்போது அந்த நபர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

பிணத்தை வைத்து வங்கியில் பணத்தை பெற முயன்ற பெண் - வைரலாகும் அதிர்ச்சி Video! | A Brazil Women Brought The Deceased To The Bank

இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில், விரைந்து வந்த காவல் துறையினர் அந்த பெண்ணை கைது செய்தனர். மேலும், இறந்தவரின் பெயரில் கடன்பெற்று மோசடியில் ஈடுபட முயன்றதாக அப்பெண் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.