அங்கன்வாடிக்கு தோண்டப்பட்ட பள்ளம் - தவறி விழுந்து சிறுவன் பரிதாப பலி!
தண்னீர் தேங்கியிருந்த பள்ளத்தில் 3 வயது சிறுவன் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளம்
பெரம்பலூர், வேப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு 3 வயதில் ரோகித் சர்மா என்ற மகன் இருந்தார். இந்தச் சிறுவன் அதே பகுதியில் pre kg பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் அவரது பாட்டியுடன் ரேஷன் கடைக்கு சென்று வரும் வழியில் 2 வயது சிறுமியுடன் விளையாடிக்கொண்டு வந்துள்ளார். அப்போது அங்கு அங்கன்வாடிக்காக தோண்டப்பட்ட பள்ளம் இருந்துள்ளது.
சிறுவன் பலி
அதில் ஏற்கனவே நீருற்று இருந்த நிலையில் அதில் சிறுவன் தவறி விழுந்துள்ளான். அப்போது அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்ததில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். அதன்பின் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர்.
அங்கன்வாடிக்காக தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடப்படாமல் இருந்துள்ளது. இதில் அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.