எங்க அம்மாவ புடிச்சு ஜெயில்ல போடுங்க.. புகார் அளித்த 3 வயது சிறுவன் - பதறிய போலீஸ்

Viral Video Madhya Pradesh
By Sumathi Oct 18, 2022 10:26 AM GMT
Report

தனது தாய் மீது, போலீஸில் 3 வயது சிறுவன் புகார் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாக்லெட் திருட்டு

மத்தியப்பிரதேசம், புர்ஹான்பூரைச் சேர்ந்த 3வயது சிறுவன் தனது தாயிடம் சாக்லெட் கேட்டு அடம் பிடித்துள்ளான். ஆனால், அவர் சாக்லேட்டுகளை ஒளித்து வைத்துக் கொண்டு தர மறுத்துள்ளார். இதனால் கோவமடைந்த சிறுவன் தாய் சாக்லேட்டுகளைத் திருடி ஒளித்து வைத்துள்ளதாகவும்,

எங்க அம்மாவ புடிச்சு ஜெயில்ல போடுங்க.. புகார் அளித்த 3 வயது சிறுவன் - பதறிய போலீஸ் | 3 Year Son Complaint To Mother In Police Station

அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்று தந்தையிடம் பிடிவாதமாக கூறியுள்ளான். மேலும் காவல் நிலையம் அழைத்துச் செல்லவும் வற்புறுத்தியுள்ளான். இதனால் சிறுவனை, காவல்நிலையம் அழைத்துச் சென்றுள்ளார் தந்தை.

புகாரளித்த சிறுவன்

அங்கு, காவல் நிலைய துணை ஆய்வாளர் பிரியங்கா நாயக்கிடம் நடந்தவற்றை சிறுவனின் தந்தை கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து, சிறுவனிடம் புகார் பெறுவது போல காவல் துணை ஆணையர் புகாரைப் பெற்றுள்ளார்.


குழந்தைகள் பொதுவாக போலீஸாரைக் கண்டுப் பயப்படும் போது காவல் நிலையம் சென்றால் தான் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற சிந்தனை 3 வயது சிறுவனுக்கு வந்ததைச் சுட்டிக்காட்டிய பிரியங்கா, சிறுவனின் செயலுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

பதறிய எஸ்ஐ

உன் புகாரின் பேரில், உன் தாயை கைது செய்து சிறையில் அடைத்து விடுவோம் என்று அந்த சிறுவனுக்கு நிலைமையைப் புரிய வைத்து அவனது தந்தையுடன் காவல் துணை ஆய்வாளர் பிரியங்கா நாயக் அனுப்பி வைத்தார்.

இது தொடர்பான காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.