41,000 ஆண்டுகள் பழமையான நெருப்புக்கோழி கூடு..மிரண்டுபோன ஆய்வாளர்கள்- எங்கு தெரியுமா?

India Andhra Pradesh
By Swetha Jun 28, 2024 07:59 AM GMT
Report

உலகின் மிகப்பழமையான நெருப்புக்கோழியின் கூடு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

நெருப்புக்கோழி கூடு

பல கோடி வருடங்களுக்கு முன்பு உருவான இந்த பூமியில் மனிதர்கள் உருவாகி வெறும் சில லட்சம் வருடங்களே ஆகியுள்ளது ஆனால், நெருப்புக்கோழிகள் 2 கோடி ஆண்டுகளுக்கு முன்னரே இந்த பூமியில் வாழ்ந்து வருவதாக ஆய்வுகள் கூறுகிறது.

41,000 ஆண்டுகள் பழமையான நெருப்புக்கோழி கூடு..மிரண்டுபோன ஆய்வாளர்கள்- எங்கு தெரியுமா? | A 41 000 Year Old Ostrich Nest Found In Andhra

ஒரு காலகட்டத்தில் ஆசியா முழுவதும் பரவியிருந்த நெருப்புக்கோழி தற்போது ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படுகிறது. இதன் பூர்வீகம் அரபு நாடுகளாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த சூழலில், ந்திராவில் சுமார் 41,000 ஆண்டுகளுக்கு முந்தைய நெருப்புக்கோழியின் கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது வரலாற்று ஆய்வாளர்களிடையே ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இதுவே பழமையானதாக சொல்லப்படுகிறது. வதோதரா பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஜெர்மனி, ஆஸ்திரேலியா,

அமெரிக்காவைச் சேர்ந்த நிபுணர்கள் ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசத்தில் புதைபடிமங்கள் நிறைந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இந்த கூடு கிடைத்துள்ளது. இந்த கூட்டில் 911 நெருப்புக்கோழி முட்டைகள் வரை இருந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

1,700 ஆண்டுகள் பழமையான முட்டை - உள்ளே இருந்ததை கண்டு அதிர்ந்த விஞ்ஞானிகள்!

1,700 ஆண்டுகள் பழமையான முட்டை - உள்ளே இருந்ததை கண்டு அதிர்ந்த விஞ்ஞானிகள்!

41,000 ஆண்டு

இந்த காலத்தில் நெருப்புக்கோழிகளின் கூடுகள் 9-10 அடி விட்டம் கொண்டதாக இருக்கிறது. இதில் 30-40 முட்டைகள் அடைகாக்கப்படும். ஆனால், ஆந்திராவில் கண்டுபிடிக்கப்பட்ட கூடுகள் மிகப்பெரியதாக இருக்கிறது. எனவே ஆய்வின்போது,

41,000 ஆண்டுகள் பழமையான நெருப்புக்கோழி கூடு..மிரண்டுபோன ஆய்வாளர்கள்- எங்கு தெரியுமா? | A 41 000 Year Old Ostrich Nest Found In Andhra

சுமார் 41,000 ஆண்டுகள் முன்பு வாழ்ந்த நெருப்புக்கோழிகள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம். அதன்படி, இந்த பறவையின் இறைச்சி, சிறகுகள் உள்ளிட்டவைக்காக பல்வேறு நாடுகளில் வளர்க்கப்படுகின்றன. சுமார் 70 கி.மீ வேகத்தில் 45 நிமிடங்கள் வரை நிற்காமல் ஓட முடியும்.

இதன் உணவாக இலைகள், பூச்சிகள், பாம்புகள் ஆகியவை இருக்கின்றன. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த கூடு சர்வதேச தொல்லியல் ஆய்வாளர்களின் கவனத்தை இந்தியாவை நோக்கி திருப்பியிருக்கிறது.