1-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 14 வயது சிறுவன் செய்த கொடூரம்!
1-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு 14 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
1-ம் வகுப்பு சிறுமி
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் தனது மனைவி, 2 மகள்களுடன் வசித்து வருகிறார்.அவருடைய 2-வது மகள் அங்குள்ள அரசுப் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த சிறுமியை, அந்த பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மிட்டாய் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளான். பின்னர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் சிறுமி அழுது சத்தம் போட்டுள்ளார் .
மேலும் இந்த நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று சிறுமியை அந்த சிறுவன் மிரட்டியதாகத் தெரிகிறது. இதையடுத்து சிறுமிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.உடனடியாக சிறுமியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பாலியல் வன்கொடுமை
அப்போது பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுதொடர்பாக சிறுமியிடம், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் விசாரித்தனர். அப்போது, சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த விவரத்தைச் சிறுமி தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து சிறுமியின் தாய்,தேனி அனைத்து மகளிர் காவல்துறை நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை செய்த சிறுவனைக் கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
36 நாட்களாக கடலில் தத்தளிப்பு! வங்காள விரிகுடாவில் உயிருடன் மீட்கப்பட்ட இரு இலங்கை கடற்றொழிலாளர்கள் IBC Tamil