கொடுமை.. ஓட்டு போடாதவருடன் கல்யாணமா? வருங்கால மனைவி எடுத்த திடீர் முடிவு!
வருங்கால கணவர் வாக்களிக்க மறுத்ததால் பெண் ஒருவர் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கல்யாணமா?
உலக மக்கள் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று தொடங்கியது. மக்கள் வாக்களித்த முடித்ததும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தொடங்கிய முதலே முன்னிலையில் இருந்த குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், னது வருங்கால கணவர் வாக்களிக்கத் தவறியதால், நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொள்ள விரும்புவதாகக் கூறி ஒரு பெண் இணையத்தில் கூறியது விவாதத்தைத் தூண்டியுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், அவர்கள் புளோரிடாவில் வசிப்பதாகவும், அவருடைய வருங்கால கணவர் வாக்களிக்க மறுத்துவிட்டார் என்றும் அந்த பெண் விளக்கினார். ஏனெனில் அவருக்கு எந்த வேட்பாளர்களும் பிடிக்கவில்லை.
வருங்கால மனைவி
மேலும் எங்கள் உரிமைகளை இன்னும் கட்டுப்படுத்தும் எதிர்காலத்தைப் பற்றி நான் பயப்படுகிறேன் என்று அந்தப் பெண் கூறியுள்ளார். மேலும் "எங்கள் அரசியல் கருத்துக்கள் மிகவும் ஒத்தவை. எனவே அவர் இந்த வாக்கைத் தவிர்ப்பதில் ஏன் அலட்சியமாக இருக்கிறார் என்று எனக்குப் புரியவில்லை என்றார்.
அவர் வாக்களிக்கவில்லை என்றால் நான் அவருடன் இருக்க முடியாது என்று சொல்வது கொடுமையா?" என்று பதிவிட்டு இருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த பதிவு பகிரப்பட்ட நிலையில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.