காதலுக்கு வயதில்லை..100 வயதில் காதலியை கரம்பிடித்த போர்வீரர்!
போர் வீரர் ஒருவர் 100 வயதில் காதலியை கரம் பிடித்துள்ளார்.
போர்வீரர்
இரண்டாம் உலக போரில் பங்கேற்ற அமெரிக்க முன்னாள் போர் வீரர் ஒருவர் தனது 100 வயதில் காதலியை திருமாணம் செய்துகொண்டார். அவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படு வைரலாக பரவி வருகிறது. ஹரால்டு டெரன்ஸ் என்ற அந்த போர்வீரர் 100 வயதை எட்டியுள்ளார்.
இவரது காதலியான ஜீன் ஸ்வெர்லினைக்கு 96 வயதாகிறது. பிரான்ஸ்சில் உள்ள நார்மாண்டி பகுதியில் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த நகரத்தின் மேயர் தலைமையில் இந்த திருமணம் நல்ல படியாக நடந்து முடிந்தது.
100 வயதில்..
இது தொடர்பான விடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் சில பயனர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தாலும், ஒரு சிலர் இந்த வயதில் இது தேவையா? என பதிவிடுகின்றனர்.
அதற்கு பதிலளித்த ஜீன், காதல் என்பது இளைஞர்களுக்கு மட்டும்தானா? எங்களுக்கும் அந்த உணர்வு உண்டு என்றார். இந்நிலையில் ஹரால்டு- ஜீன் தம்பதிக்கு பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் விருந்தளித்திருக்கிறார்.