9ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கூலித்தொழிலாளி
பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து இளைஞர் கர்ப்பமாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
தருமபுரி, பஞ்சப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கும், மாரண்டஅள்ளி அருகே உள்ள சீங்காடு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கோபி (22) என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மாணவியை ஆசை வார்த்தைக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தார்.
கொடுமை
அதனையடுத்து பெற்றோர் மாணவியை மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதித்ததில் அவர் 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதனால் அதிர்ச்சையடைந்த பெற்றோர் புகாரளித்தனர்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.