காசியில் எரிந்த சடலத்தில் 94 என்று எழுதுவதன் அர்த்தம் தெரியுமா? இதுதான் காரணம்!
காசியில் எரிந்த சடலத்தில் 94 என்று எழுதுவதன் பின்னணியை பார்ப்போம்.
எரிந்த சடலம்
புனித தலங்களில் முதன்மையாக கருதப்படுவது காசி. இங்கு இறந்தவர்களை அங்கே எரிப்பதன் மூலம் அவர்கள் நேராக சொர்க்கத்திற்கு செல்வதாகவும் கூறப்படுகிறது.
அங்குள்ள சடலங்கள் மணிகர்ணிகா காட் என்ற சடலங்களை எரிக்கும் இடத்தில் தகனம் செய்யப்படுகிறது. அப்படி தகனம் செய்யப்படும் உடல்கள் சாம்பல் ஆன பிறகு அதில் 94 என்று எழுதப்படும் வழக்கம் அங்கு உள்ளது.
94 குணங்கள்
ஒரு மனிதனுக்கு 94 குணங்கள் இருப்பதாகவும், அவற்றை அவன் அவனது செயல்களுக்கு ஏற்ப அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும் என்றும் கூறப்படுகிறது.
பிரம்மா ஒவ்வொரு மனிதனுக்கும் ஆறு குணங்களை வழங்குகிறார். இந்த குணங்கள் ஒருவருக்கு இருந்தால், அவர் அனைத்து நற்பண்புகளையும் பெற்றவராகக் கருதப்படுகிறார்.
எனவே இந்த நடைமுறை மூலம் முக்தி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.