பிரபல கோயில் உண்டியலில் ரூ.90 கோடி காசோலை..ஆடிப்போன அதிகாரிகள் - நடந்தது என்ன?

Tamil nadu Dharmapuri
By Swetha Jun 29, 2024 07:52 AM GMT
Report

முனியப்பன் சுவாமி கோயிலின் உண்டியலில் ரூ.90 கோடி மதிப்பிலான காசோலை கிடைத்துள்ளது.

கோடி காசோலை

தருமபுரி அருகே பிலியனூர் அக்ரஹாரம் பகுதியில் அறநிலையத் துறைக்கு சொந்தமான அருள்மிகு முனியப்பன் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு அமாவாசை நாட்களில் ஆண்டுதோறும் வரும் மார்கழி மாதம் 2வது செவ்வாய்க்கிழமை கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

பிரபல கோயில் உண்டியலில் ரூ.90 கோடி காசோலை..ஆடிப்போன அதிகாரிகள் - நடந்தது என்ன? | 90 Crore Cheque Donated To Muniyapaswamy Temple

இங்கு அன்னதானம் செய்வதற்காகவே கோயில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.அந்த உண்டியல் மாதந்தோறும் திறக்கப்பட்டு காணிக்கை வருவாய் கோயில் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன் கோயிலில் உண்டியல் திறக்கப்பட்டு,

திருட சென்ற இடத்தில் உண்டியலில் மாட்டிய கை - இரவு முழுவதும் திருடன் கண்ணீருடன் தவிப்பு!

திருட சென்ற இடத்தில் உண்டியலில் மாட்டிய கை - இரவு முழுவதும் திருடன் கண்ணீருடன் தவிப்பு!

நடந்தது என்ன?

தருமபுரி அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது. அப்போது உண்டியலில் கிடந்த ஒரு காசோலையை பார்தவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த காசோலையில் ரூ.90.42 கோடி (ரூ. 90,42,85,256) எனக் தொகை குறிப்பிடப்பட்டிருந்தது.

பிரபல கோயில் உண்டியலில் ரூ.90 கோடி காசோலை..ஆடிப்போன அதிகாரிகள் - நடந்தது என்ன? | 90 Crore Cheque Donated To Muniyapaswamy Temple

தருமபுரி சவுச் இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் மகேந்திரன் என்பவர் பெயரில் காசோலை உண்டியலில் போட்டுள்ளது. இது பேரதிர்ச்சியை கொடுத்தாலும் அதன் உண்மைதன்மையை கண்டறிய திகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயில் உண்டியலில் இவ்வளவு பெரிய தொகை குறிப்பிட்டு போட்டப்பட்ட காசோலை அப்பகுதியில் பேசு பொருளாகி உள்ளது. மேலும், கோயிலுக்கு இவ்வளவு பெரிய தொகையை கொடுத்த கொடை வள்ளல் யார் என்பதை அறிய பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.