3 வயது சிறுமிக்கு 9 வயது சிறுவன் பாலியல் தொல்லை; காரணத்தை கேட்டு அதிர்ந்த பெற்றோர்
3 வயது சிறுமிக்கு 9 வயது சிறுவன் பாலியல் தொல்லை அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
3 வயது சிறுமி
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள கோந்த்வா பகுதியில் ஒரு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
அருகில் உள்ள வீட்டில் 3வது படிக்கும் 9 வயது சிறுவனும் வசித்து வந்துள்ளார். அந்த சிறுமி சிறுவனை அண்ணன் என அழைத்து வந்துள்ளார்.
சமூக ஊடக தாக்கம்
இந்நிலையில் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது சிறுவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளான். இதை சிறுமி தனது தாயிடம் முறையிட்டுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
குழந்தைகள் உரிமை அமைப்பின் முன் சிறுமியிடம் இது தொடர்பாக வாக்குமூலம் பெறப்பட்டது. இதனையடுத்து அந்த சிறுவன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டது.
அந்த சிறுவனிடம் நடத்திய விசாரணையில், சமூகவலைத்தளங்களை பார்த்து இந்த தவறை செய்ததாக அந்த சிறுவன் தெரிவித்தது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.