10 மாத குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை - குடும்ப நண்பர் செய்த கொடூரம்

Gujarat
By Karthikraja Sep 26, 2024 11:30 AM GMT
Report

10 மாத குழந்தையை குடும்ப நண்பர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10 மாத குழந்தை

நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அரசும் பெண்களை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. 

baby harassed

இளம்பெண்கள் பாலியல் தொல்லைக்கு அதிகளவில் ஆளாகி இருந்த நிலையில் 10 மாத குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ட்ரீட் தர மறுத்த சிறுவன் - நண்பர்கள் செய்த கொடூர செயல்

ட்ரீட் தர மறுத்த சிறுவன் - நண்பர்கள் செய்த கொடூர செயல்

குடும்ப நண்பர்

குஜராத் மாநிலத்தைச் பரூச் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஹோட்டல்களில் வேலை செய்து வருகிறார். இவரது 10 மாத குழந்தையை குழந்தையின் பாட்டி பராமரித்து வந்தார். இந்நிலையில் வழக்கம் போல் குழந்தை வீட்டு முற்றத்தில் வைத்து பாட்டியுடன் விளையாடி கொண்டு இருந்துள்ளது.

அப்பொழுது வீட்டுக்கு அடிக்கடி வரும் குடும்ப நண்பரான தீபக் குமார்(30) வீட்டிற்கு வந்து குழந்தையுடன் விளையாடி இருக்கிறார். அப்போது குழந்தையின் பாட்டிக்கு தின்பண்டம் வாங்கி செல்வதாக கூறிய அவர், குழந்தையையும் தன்னுடன் அழைத்து செல்வதாக கூறியுள்ளார். 

gujarat 10 month baby

அடிக்கடி வரும் குடும்ப நண்பர் தானே என்ற நம்பிக்கையில் குழந்தையை அவரிடம் அளித்துள்ளார். குழந்தையை அழைத்து கொண்டு வெகு தூரம் சென்ற அவர் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின் எதுவும் நடக்காதது போல் குழந்தையை மீண்டும் ஒப்படைத்துள்ளார்.

கைது 

குழந்தை தொடர்ந்து கதறி அழுது கொண்டே இருந்த நிலையில் குழந்தையை பரிசோதித்த போது அந்தரங்க உறுப்பில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த குழந்தை உடனடியாக விரைந்து வந்து குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.  

இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தீபக் குமாரை கைது செய்த விசாரித்து வருகின்றனர். 10 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.