19 வயது இளம்பெண்ணை சீரழித்த 4 சிறுவர்கள்; வெளியான வீடியோ - கதறிய பெற்றோர்!
19 வயது இளம்பெண்ணை 4 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
ஜார்கண்ட் மாநிலத்தின் ராம்கார் பகுதியில் நிலக்கரி கிடங்கு ஒன்று உள்ளது. இந்த கிடங்கில் உள்ள மறைவான பகுதிக்கு 19 வயது இளம்பெண்ணை, 4 சிறுவர்கள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
ஆனால், இதுகுறித்து அந்த இளம்பெண் போலீசில் புகார் அளிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில் "இந்த விஷயம் பற்றி வெளியே கூறினால், ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவோம் என்று அந்த 4 சிறுவர்களும் இளம்பெண்ணை மிரட்டியுள்ளனர்.
சிறுவர்கள் கைது
இதனால் அந்த பெண் போலீசில் புகையால் அளிக்காமல் இருந்துள்ளார். ஆனால் அந்த சிறுவர்கள் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து இளம்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் 4 சிறுவர்களையும் கைது செய்துள்ளனர். பின்னர் அவர்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்" என்று தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் அனைவரும் 15 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.