மாரடைப்பால் 9 வயது சிறுமி உயிரிழப்பு - பெற்றோர்களே கவனம்!
9 வயது பள்ளி மாணவி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
சிறுமி இறப்பு
ராஜஸ்தான், சிக்கரின் டான்டா நகரைச் சேர்ந்தவர் பிராச்சி குமாவத்(9). இவர் அங்குள்ள பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல், பள்ளிக்குச் சென்றுள்ளார்.
தொடர்ந்து மதிய உணவு இடைவேளையின்போது உணவருந்த அமர்ந்துள்ளார். அப்போது திடீரென மயக்கம்போட்டு விழுந்துள்ளார். உடனே விரைந்த ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மாரடைப்பால் அதிர்ச்சி
பரிசோதனையின்போது அவருக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே அவர் இறந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவரைப் பரிசோதித்த மருத்துவர் சுபாஷ் வர்மா,
“ஒரு நோயாளியை அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டால், மக்கள் உடனடியாக CPR கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு இது ஏற்படுவது அரிதான நிகழ்வு. சில நேரங்களில், இது பிறவி இதய நோயாகக்கூட இருக்கலாம்.
பெற்றோர்கள் அதை கவனிக்காமல் இருக்கலாம். அது விசாரிக்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.