பள்ளிக்குச் சென்ற 9 வயது சிறுவன்..கடித்து குதறிய தெரு நாய் - துடிதுடித்து உயிரிழந்த கொடூரம்!
தெருநாய் கடித்ததில் 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள சித்தேகவுண்டனூரை சேர்ந்தவர் மாதேஷ். கட்டி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு நந்திஷ் என்ற 9 வயதில் மகன் உள்ளார்.இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொரோனாவால் உயிரிழந்தார். இந்த நிலையில் நந்திஷ் தனது பாட்டி வீட்டில் வளர்ந்து வந்துள்ளார்.கடந்த 5 நாட்களுக்கு முன்னர் பள்ளிக்குச் செல்லும்போது நாய் கடித்ததை, வீட்டில் தெரிவிக்காமலிருந்துள்ளார்.
இந்த சூழலில், சனிக்கிழமை நந்திஷூக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளனர்.
9 வயது சிறுவன்
அப்போது சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் உயர் சிகிச்சைக்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஆம்புலன்சில் சிறுவனின் உயிர் பிரிந்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தெருநாய் கடித்து 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வெள்ளையர்களுக்கு எதிரான பாகுபாடு குற்றச்சாட்டு: தென்னாப்பிரிக்க அதிகாரிகளுக்கு அமெரிக்கா பயணக் கட்டுப்பாடு IBC Tamil
ஈரானில் பயங்கரம் : பயணிகளுடன் சென்ற விமானத்திற்கு ஏற்பட்ட நிலை : சரிந்து விழுந்த விமான கூரை பாகங்கள் IBC Tamil
இலங்கையில் இடம்பெறும் அநீதியின் உண்மையை அம்பலப்படுத்தியுள்ளோம்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் IBC Tamil