சினிமாவில் நடிக்க ஆசை..விபச்சார கும்பலிடம் சிக்கிய 9 பெண்கள் - பகீர்!
சினிமாவில் நடிக்கும் ஆசையில், விபச்சார கும்பலிடம் சிக்கிய 9 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
பாலியல் தொழில்
சென்னை, திருவல்லிக்கேணியில் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு பாலியல் தொழில் நடத்தி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால், உடனே சென்று ரெய்டு நடத்தியுள்ளனர்.
அதில், பாலியல் தொழில் நடத்தி வந்த பிரகாஷ், ஏசு என்ற இருவரை கைது செய்துள்ளனர். மேலும் அந்த விடுதியில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 9 பெண்களையும் மீட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
9 பெண்கள் மீட்பு
அதில், சென்னையில் வேலை தேடி வந்துள்ளனர். அவர்களை கைது செய்யப்பட்ட இருவரும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஏமாற்றியுள்ளனர். மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகவும் கூறியுள்ளனர்.
அதனை நம்பி ஏமாந்ததாக கூறியுள்ளனர்.
அதனையடுத்து மீட்கப்பட 9 பெண்களையும் போலீஸார் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.