9 நட்சத்திர வீரர்கள் நீக்கம்; பிசிசிஐ வைத்த ஆப்பு - யாரெல்லாம் தெரியுமா?

Shreyas Iyer Cricket Indian Cricket Team Ishan Kishan
By Sumathi Feb 29, 2024 12:31 PM GMT
Report

ஒப்பந்த பட்டியலில் இருந்து நட்சத்திர வீரர்கள் 9 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

 பிசிசிஐ

2023-24 கிரிக்கெட் வீரர்களின் வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில், 30 கிரிக்கெட் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

9 நட்சத்திர வீரர்கள் நீக்கம்; பிசிசிஐ வைத்த ஆப்பு - யாரெல்லாம் தெரியுமா? | 9 Star Cricketers Of India Axed From Bcci Central

இந்த ஒப்பந்தத்தில் முக்கிய இரண்டு கிரிக்கெட் வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெறவில்லை. மேலும், இவர்கள் உட்பட 9 கிரிக்கெட் வீரர்கள் வாரிய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

எல்லை மீறும் ஸ்ரேயாஸ், இஷான் கிஷன்; கடுப்பில் பிசிசிஐ - கடும் நடவடிக்கை!

எல்லை மீறும் ஸ்ரேயாஸ், இஷான் கிஷன்; கடுப்பில் பிசிசிஐ - கடும் நடவடிக்கை!

9 பேர் நீக்கம்

அஜிங்க்யா ரஹானே, சேதேஷ்வர் புஜாரா, உமேஷ் யாதவ், ஷிகர் தவான், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல், தீபக் சாஹர் ஆகியோர் வெளியேறிய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

virat kholi - rohit sharma

ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் ஊதியம் கொண்ட A+ பிரிவில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மற்றும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.