தினமும் இனி 9.15 மணி நேரம் பணி; பறந்த உத்தரவு - மிரண்ட ஊழியர்கள்!
ஊழியர்கள் தினமும் 9.15 நிமிடம் மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
9.15 நிமிடம் மணி நேர வேலை
இன்போசிஸ் நிறுவனரான நாராயணமூர்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊழியர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என பேசி இருந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஒவ்வொரு ஊழியருக்கும் தனித்தனியாக மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. வாரத்தின் ஐந்து நாட்களில் தினமும் 9 மணி நேரம் 15 நிமிடங்கள் வேலை பார்க்க வேண்டும் எனவும்,
இன்ஃபோசிஸ் எச்சரிக்கை
குறிப்பாக வீடுகளில் இருந்து வேலை பார்ப்பவர்கள் கட்டாயம் இந்த நேர கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் எனவும், இல்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு மாத இறுதியிலும் அவர்கள் எவ்வளவு நேரம் பணியாற்றினார்கள் என கண்காணிக்கப்பட்டு அந்த தரவுகள் ஹெச்ஆர் டிபார்ட்மெண்டுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஹெச்ஆர் பிரிவு அறிவித்துள்ளது.
முன்னதாக இன்போசிஸ் ஊழியர்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அலுவலகத்தில் பத்து நாட்கள் பணியாற்றிய வேண்டுமென வற்புறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.