'குழிமந்தி பிரியாணி' சாப்பிட்ட 85 பேர் மருத்துவமனையில் அனுமதி - என்ன நடந்தது?
குழிமந்தி பிரியாணி சாப்பிட்ட 85 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழிமந்தி பிரியாணி
கேரள மாநிலத்தில் ஏமன் நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட 'குழிமந்தி பிரியாணி' மிகவும் பிரபலமான உணவாக உள்ளது. இதனை அம்மாநிலத்தில் பலர் விரும்பி சாப்பிடுவதால் ஏராளமான அசைவ ஓட்டல்களில் இந்த பிரியாணி விற்கப்படுகிறது.
இந்நிலையில் திருச்சூர் கொடுங்கல்லூரில் உள்ள ஒரு ஓட்டலில் நேரடியாகவும், பார்சல் மூலமாகவும் 'குழிமந்தி பிரியாணி' சாப்பிட்ட 85 பேருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு திடீரென வாந்தி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
அதிகாரிகள் ஆய்வு
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சென்று சோதனை நடத்தினர்.
பின்னர் அங்கிருந்த உணவு பொருட்களை பறிமுதல் செய்து ஆய்வுக்காக அனுப்பினர். குழிமந்தி பிரியாணி சாப்பிட்ட 85 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.