80 வயது நபரை திருமணம் செய்த 25 வயது பெண்; ஒரே வெட்கம் - கண்ணீர் விடும் 90ஸ் கிட்ஸ்!
25 வயது பெண், 80 வயது நபரை திருமணம் செய்துள்ளார்.
முதியவர் திருமணம்
பீகார், கயா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முஹம்மது கலிமுல்லா நூரானி(80). இவர் ஒரு விவசாயி. திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். 2 மகன்களுக்குமே திருமணமாகியுள்ளது.
மனைவி இறந்த நிலையில், முஹம்மது தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தனக்கு ஒரு துணை வேண்டுமென ஆசைப்பட்டுள்ளார். இதனால் 2வது திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.
வைரல் காட்சிகள்
தொடர்ந்து, ரேஷ்மா பர்வீன் என்ற 25 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். தற்போது இவர்களது திருமண வீடியோ வெளியாகியுள்ளது.
அதில், மணமகள் - மணமகனின் முழு சம்மதத்தை பெற்றே இந்த திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.
திருமண மண்டபத்தில் ஏராளமானோர் திரண்டுள்ளனர். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.