15 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த 60 வயது முதியவர்... - வெளியான அதிர்ச்சி தகவல்..!
15 வயது சிறுமியை கடத்தி வலுக்கட்டாயமாக 60 வயது முதியவர் திருமணம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
15 வயது சிறுமியை கட்டாயமாக திருமணம் செய்த முதியவர்
பாகிஸ்தானில் 15 வயது இளம் சிறுமி கடத்தப்பட்டு 60 வயது முஸ்லீம் நபருடன் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான், பைசலாபாத்தைச் சேர்ந்தவர் ஆரிஃப் கில். இவர் உடல் ஊனமுற்ற நபர். இவருடைய மகள் சிதாரா (15). குடும்ப சூழ்நிலை காரணமாக, பாகிஸ்தானின் பைசலாபாத்தில் உள்ள ஒரு பொதுப் பள்ளியின் முஸ்லீம் முதல்வரான நைலா அம்ப்ரீனின் வீட்டு வேலைக்காக சிதாரா சென்றுள்ளார்.
ஆனால், நைலா தனது 60 வயது கணவரான ராணா தய்யாப்பிற்கு, 15 வயது சிறுமி சிதாராவை 2வது மனைவியாக திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்.
கடந்த டிசம்பர் 15ம் தேதி வேலை சென்ற சிதாரா வீடு திரும்பவில்லை. இதன் பிறகு சிதாராவை கடத்திச் சென்று ராணா 2வது திருமணம் செய்து கொண்டதாக சிதாராவின் குடும்பத்தினர் கேள்விப்பட்டனர்.
இது தொடர்பாக போலீசாரிடம் சிதாராவின் குடும்பத்தினர் புகார் கொடுத்தனர். ஆனால், 2 மாதங்களாகியும் போலீசார் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தபிறகு, தற்போது போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 60 வயதான ராணா, 15 வயதான சித்தாராவை தனது 2வது மனைவியாக ஏற்றுக்கொண்டதாகவும், நிக்காஹ் அல்லது இஸ்லாமிய திருமண சான்றிதழ் போலீசாரிடம் காட்டினார்.
ஆனால் தற்போது பாகிஸ்தானில் மைனர் திருமணம் செய்வது சட்டவிரோதமாகும். இதனால், இத்திருமணம் செல்லாது என்று கூறிய போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.