பாடம் எடுக்கும் 80% ஆசிரியர்களுக்கு அடிப்படை கணிதம் கூட தெரியவில்லை - ஷாக் தகவல்!
80 சதவீத ஆசிரியர்களுக்கு கணிதத்தின் அடிப்படை கூட தெரியவில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆசிரியர்களுக்கு..
இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் உள்ள 152 பள்ளிகளை சேர்ந்த 1,300-க்கு மேற்பட்ட கணித ஆசிரியர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டதில் பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.
ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கணிதப் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களின் பாட அறிவை அறியும் வகையில் ஆய்வு ஒன்றை தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் நடத்தியது. அதில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு கணிதப் பாடம் சார்ந்த முதல்நிலை மதிப்பீட்டு பயிற்சி தேர்வு நடத்தப்பட்டது.
அவர்கள் பணிபுரியும் பள்ளிகளின் முதல்வர்களுக்கு இந்த அறிக்கை பகிரப்பட்டது. இது தொடர்பான ஆய்வில் கூறப்பட்டிருப்பது, அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறனை மேம்படுத்த உதவும் விகிதம் மற்றும் விகிதாசாரம்,
அடிப்படை கணிதம்
தர்க்க ரீதியான பகுப்பாய்வு இயற்கணிதம் உள்ளிட்ட பாடங்களில் இருந்து அடிப்படையான கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு பதில் அளிக்க 80 சதவீத கணித ஆசிரியர்கள் தடுமாறினர். 4-ம் வகுப்பு தரத்திலான கணிதப் பாட கேள்விகளுக்கு 73.3 சதவீத ஆசிரியர்கள் சரியாக பதில் அளித்தனர்.
ஆனால் 7-ம் வகுப்பு தரத்திலான கேள்விகளுக்கு 36.7 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே சரியாக விடை அளித்தனர். பயிற்சி தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளில் 50 சதவீத கேள்விகளுக்கு 75 சதவீத ஆசிரியர்கள் சரியாக பதில் அளித்தனர்.
25 சதவீத கேள்விகளுக்கு எந்தவித தவறுதவறுகளும் இல்லாமல் 25 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே பதில் அளித்தனர் என தெரியவந்தது. அதேபோல் வடிவியல் பாடம் சார்ந்த அடிப்படைக் கேள்விகளுக்கும்
தவறான புரிதலோடு ஆசிரியர்கள் பதில் அளித்தனர். தசம எண்களை முழு எண்களாக எடுத்து மதிப்பீடு செய்வது போன்ற தவறுகளையும் ஆசிரியர்கள் செய்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.