ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட் - பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்

M K Stalin Government of Tamil Nadu
By Thahir Mar 01, 2023 06:40 AM GMT
Report

தனது 70வது பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

குவியும் வாழ்த்துக்கள் 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். முதலமைச்சர் பிறந்தநாளை இன்று திமுக தொண்டர்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடி வருகின்றனர்.

இந்தநிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களை சந்தித்து அவர்களுக்கு மரக்கன்றுகளை பரிசளித்தார்.

இதையடுத்து அவருக்கு குடியரசு தலைவர், பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசு தலைவர், தமிழ்நாடு ஆளுநர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட் 

இந்த நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

stalin-made-important-announcement-to-the-teachers

அரசின் திட்டங்களை மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும் ஆசிரியர்களுக்கு வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள். ஆதாவது, அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவார்கள் எனா அறிவித்துள்ளார்.

கல்விச்செலவு உயர்வு: ஆசிரியர்களின் நலனை காக்க புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அந்தவகையில், அனைத்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (டேப்) வழங்கப்படும்.

அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும். உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக ஆசிரியர் நல நிதியிலிருந்து வழங்கப்படும் கல்விச்செலவு ரூ.50,000 வரை உயர்த்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மொத்தம் ரூ.225 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் கூறியுள்ளார்.