பணத்துக்கு ஆசைப்பட்டு தாய் செய்த கொடூரம் - 13 வயது மகள் கவலைக்கிடம்!
மதுரையில் தனது 13 வயது மகளை வைத்து தாய் செய்த கொடூர செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி
மதுரை சம்பக்குளத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி, இவரின் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது தாயும் கைவிட்டார், இதனால் செல்லூரில் இவரது தந்தை வழி பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.
இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். தொடர்ந்து கோடை விடுமுறையில் இவரது தாய் வந்து சம்பக்குளத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த சிறுமியை வைத்து அவர் பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளார்.
அதனால் அந்த சிறுமிக்கு தினமும் இரவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்துள்ளார்.
கொடூர தாய்
இந்நிலையில், அந்த சிறுமி மயக்க நிலையில் இருக்கும்போது, சிலர் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அந்த சிறுமிக்கு சிகரெட்டால் சூடு வைத்துள்ளனர். பின்னர் அந்த சிறுமி கருவுறாமல் இருப்பதற்காக இவரது தாய் மாத்திரைகளை கொடுத்துள்ளார்.
அங்கிருந்து தப்பி தனது பாட்டி வீட்டிற்கு வந்த சிறுமி தனது பாட்டியிடம் அனைத்தையும் கூறியுள்ளார். தொடர்ந்து, அந்த விபச்சார கும்பலை சேர்ந்த புவனேஷ் என்பவர் போலீசில் புகார் செய்தால் சிறுமி மீது ஆசிட்வீசி, கொலை செய்வேன் என்றும், சிறுமியின் ஆபாச படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.
அனால் பாட்டி போலீசிடம் புகாரளித்துள்ளார், இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து இதற்கு உடந்தையாக இருந்த அந்த சிறுமியின் சித்தி, பெரியம்மா என பேரை கைது செய்துள்ளனர்.