மதுரையில் ஓபிஎஸ் , ஈபிஎஸ் .. உடன் ரகசிய மீட்டிங் : பிரதமர் மோடியின் திட்டம் என்ன ?
பிரதமர் மோடி பெங்களூரில் இருந்து மதியம் 1.20 மணிக்கு புரப்பட்டு 2.20 மணிக்கு மதுரை விமான நிலையம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடியினை அதிமுகவின் முக்கியத்தலைவர்களான எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையில் மோடி
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி பிரதமரை வரவேற்க நேரில் செல்ல இருப்பதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை கூறியிருந்தார்.
ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் மெகா கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில் பிரதமர் மோடியினை அதிமுகவின் முக்கியத்தலைவர்கள் சந்தித்து பேசுவது முக்கியத்துவம் பெறுகிறது.
தனித்தனியாக சந்திப்பு
ஆனால் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் - யும் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார் பிரதமர். அதன் பிறகு, திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
பின்னர், மாலை 4.20 மணிக்கு மதுரை விமான நிலையத்துக்கு சென்று 5.20 மணிக்கு பிரதமர் மோடி விசாகப்பட்டினம் செல்ல உள்ளார்.
பிரதமர் மோடி மதுரையில் ஓபிஎஸ் ஈபிஎஸ் இடையே உள்ள கருத்து வேறுபாடு குறித்தும் , வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் பிரதமர் மோடி விசாரிக்கலாம் என கூறப்படுகிறது.
ஏற்கனவே இருவரும் கருத்து வேறுபாடுகளை கலைந்து இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன,].