8ஆம் வகுப்பு மாணவன் கழுத்தறுத்து கொலை - வனப்பகுதிக்குயில் குலை நடுங்க வைத்த கொடூர சம்பவம்!
8ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம்
ஆந்திர மாநிலம் சத்தியசாய் மாவட்டத்தை சேர்ந்தவர் சேத்தன் குமார். இவர் அந்த பகுதியில் செயல்பட்டு வரும் உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளி முடிந்து அங்கிருந்து புறப்பட்ட மாணவன் சேத்தன் குமார் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் இரவு முழுவதும் நண்பர்கள் வீடு , உறவினர்கள் வீடு என அனைத்து இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். எங்குத் தேடியும் கிடைக்காததால் அச்சம் அடைந்து காவல் நிலையத்தில் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கும் சிசிடிவி கேமிராவை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.அதில் 2 பேர் சிறுவனை இருசக்கர வாகனத்தில் மடக்கசீரா பகுதி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது.
மாணவன் கொலை
அந்த பகுதிக்குச் சென்று சோதனை செய்த போது சிறுவன் சேத்தன் குமார் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டுபிடித்தனர். மேலும் சிறுவன் உடல் முழுவதும் கத்தியால் குத்திய காயங்கள் இருந்தனர். இதனையடுத்து சிறுவனின் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சிறுவனை எதற்காகக் கடத்தினார்கள்?பெற்றோருடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகச் சிறுவன் கொலை செய்யப்பட்டாரா ? என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.