ஒரு T20 போட்டியில் 8 சாதனை - மாஸ் காட்டிய ஜிம்பாப்வே

Cricket Zimbabwe national cricket team Cricket Record
By Karthikraja Oct 24, 2024 01:30 PM GMT
Report

 ஜிம்பாப்வே மற்றும் காம்பியா அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் 8 சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே காம்பியா டி20

2026 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், இதற்கான ஆப்பிரிக்க அணிகள் பங்கேற்கும் தகுதிச் சுற்று கென்யாவில் நடைபெற்று வருகிறது.

zimbabwe vs gambia t20 record

இதில் ஜிம்பாப்வே மற்றும் காம்பியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

சிக்ஸில் சரித்திரம் படைத்த இந்தியா - டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த அணியும் செய்யாத சாதனை

சிக்ஸில் சரித்திரம் படைத்த இந்தியா - டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த அணியும் செய்யாத சாதனை

அதிக ரன்கள்

அதிரடியாக ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 344 ரன் குவித்தது. 345 ரன் இலக்குடன் ஆட்டத்தை துவங்கிய காம்பியா அணி 14.4 ஓவரில் 54 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதனால் ஜிம்பாப்வே அணி 290 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஒரு டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி பல சாதனைகளை படைத்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த ஆண்டு மங்கோலியாவிற்கு எதிரான போட்டியில், நேபாளம் 314 ரன்கள் அடித்ததே ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. 344 ரன் அடித்து ஜிம்பாப்வே இந்த சாதனையை முறியடித்துள்ளது.

காம்பியா 54 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஜிம்பாப்வே அணி 290 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று T20 போட்டிகளில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

ஆட்ட நாயகன் விருது

இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற சிக்கந்தர் ராசா டி20 போட்டிகளில் அதிக ஆட்ட நாயகன் விருது பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவர் 95 போட்டிகளில் 17 போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார். 

சிக்கந்தர் ராசா Sikandar Raza

மேலும் இந்த போட்டியில் 4 ஜிம்பாப்வே வீரர்கள் அரை சதம் அடித்துள்ளனர். ஒரு டி20 போட்டியில் அதிக அரை சதம் அடித்த சாதனையையும் ஜிம்பாப்வே தன் வசப்படுத்தியுள்ளது.

அதிக பவுண்டரி

இந்த போட்டியில் 27 சிக்ஸ், 30 four என மொத்தம் 57 பவுண்டரிகளை ஜிம்பாப்வே அணி அடித்ததன் மூலம், டி20 போட்டியில் அதிக பவுண்டரி, அதிக 6, அதிக 4 அடித்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது. 

musa jobarteh

மேலும் காம்பியவை சேர்ந்த மூசா ஜோபர்டே 4 ஓவர் வீசி 93 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். இது டி20 போட்டியில் ஒரு பந்துவீச்சாளர் விட்டுக் கொடுத்த அதிக ரன்கள் ஆகும்.