ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை - காரணம் என்ன?

Saudi Arabia
By Sumathi Aug 04, 2025 09:18 AM GMT
Report

ஒரேநாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றம்

சவுதி அரேபியாவில் கஞ்சா கடத்திய குற்றத்திற்காக, நாட்டின் தெற்கு பகுதியான நஜ்ரானில் 4 சோமாலியர்கள் மற்றும் 3 எத்தியோப்பியர்கள் நேற்று தூக்கிலிடப்பட்டனர்.

ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை - காரணம் என்ன? | 8 People Executed In One Day Saudi Arabia

தொடர்ந்து ஒரு சவுதி குடிமகனுக்கு, தனது தாயைக் கொலை செய்த குற்றத்திற்காக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. முன்னதாக 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 230 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவர்களுக்கு யூடியூப் சேனல் நடத்த தடை - உலகில் முதல்முறை..

இவர்களுக்கு யூடியூப் சேனல் நடத்த தடை - உலகில் முதல்முறை..

மரண தண்டனை

அதில் 154 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைதானவர்கள். 2022ல் 19 பேருக்கும், 2023ல் 2 பேருக்கும், 2024ல் 117 பேர், 2024ம் ஆண்டு 338 மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.

saudi arabia

2022ம் ஆண்டுக்கு முன் 3 ஆண்டுகள் போதைப்பொருள் குற்றங்களுக்கு மரணதண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்தாண்டு இறுதியில் மரணதண்டனையை மீண்டும் அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.