படகு கவிழ்ந்து விபத்து - 68 பேர் துடிதுடித்து உயிரிழப்பு!
அகதிகள் படகு கவிழ்ந்த விபத்தில் 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
படகு கவிழ்ந்து விபத்து
ஏமன் கடற்கரை அருகே அகதிகள் வந்த படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த 68 பேர் உயிரிழந்தனர். மேலும் 74 பேர் காணாமல் போயினர்.
இதுவரை கன்ஃபர் மாவட்டத்தில் 54 புலம்பெயர்ந்தோரின் உடல்கள் கரை ஒதுங்கியதாக ஏமனில் உள்ள சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் (IOM) தலைவர் அப்துசத்தோர் ஈசோவ் தெரிவித்துள்ளார். 14 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
68 பேர் பலி
இது தொடர்பாக அப்யான் பாதுகாப்பு இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில், இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், பெரிய அளவிலான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடற்கரையில் பல இடங்களில் சடலங்கள் கரையொதுங்கியதாக தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களில் மட்டும் ஏமன் அருகே நடந்த கப்பல் விபத்துகளில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தனர். சுமார் 60,000க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஏமன் வந்தடைந்தனர்.
சின்ன படகுகளில் அளவுக்கு அதிகமானோர் செங்கடல் அல்லது ஏடன் வளைகுடா வழியாக அழைத்துச் செல்லப்படுவதே ஆபத்தாக மாறுவது குறிப்பிடத்தக்கது.