சிறுமியின் கனவில் வந்த சிவன்.. கனவை நனவாக்க குடும்பத்தினர் செய்த செயல் - அதிர்ச்சி சம்பவம்!
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கோவிலிலிருந்த சிவலிங்கத்தைத் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்
குஜராத் மாநிலம் துவரகாவில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த பீத் பஞ்சன் மகாதேவ் என்னும் சிவன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருந்த சிவலிங்கம் திடீரென்று மாயமானது. இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது குஜராத் மாநிலம் சபார்கந்தா மாவட்டம் ஹிமாத்நகரை சேர்ந்தவர்கள் தான் மகேந்திர மக்வானா தான் சிவலிங்கத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் மகேந்திர மக்வானா, அவரது குடும்பத்தைச் சேர்ந்த வனராஜ், மனோஜ், ஜகத், 3 பெண்கள் உள்பட மொத்தம் 8 பேர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
வீட்டில் பூஜை
அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகினர்.அதாவது மகேந்திர மக்வானாவின் சகோதரரின் மகளின் கனவில் பழமைவாய்ந்த பீத் பஞ்சன் மகாதேவ் கோவிலின் சிவலிங்கம் வந்துள்ளது.இதனை எடுத்துவந்து வீட்டில் பூஜை செய்தால் துன்பம் நீங்கி அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது போல் அவர் கனவு கண்டுள்ளார்.
இதுபற்றி சிறுமி தனது குடும்பத்தினரிடம் கூறிவே மகேந்திர மக்வானாவின் குடும்பத்தினர் சிவலிங்கத்தைத் திருட திட்டமிட்டுள்ளனர்.இதற்காக பழமைவாய்ந்த பீத் பஞ்சன் மகாதேவ் கோவிலில் அருகே பல நாட்கள் தங்கியிருந்துள்ளனர்.
பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாதபோது கோவிலில் நுழைந்து சிவலிங்கத்தைத் திருடி வீட்டுக்கு வந்து மகா சிவராத்திரி போது அந்த சிவலிங்கத்தை வீட்டில் வைத்து பூஜை செய்யத் தயாராக இருந்த நிலையில் காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய உதவி பிரதேச செயலாளரின் மரணம்...! மீண்டும் ஆரம்பமாகும் விசாரணை IBC Tamil
