8 மணிநேரம் செல்போன தொடாம இருந்தால்..ரூ.1 லட்சம் பரிசு - பெண் எப்படி வென்றார் தெரியுமா?
8 மணிநேரம் செல்போன தொடாமல் இருக்கும் போட்டியில் பெண் வெற்றி பெற்றுள்ளார்.
செல்போன்
இன்றைய காலகட்டத்தில் செல்போன் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது எனலாம். உலகில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கு ஒரு நாள் செல்போன் இல்லாவிட்டால் எதுவுமே இயங்காது.
செல்போன் பயன்பாடு பல விஷயங்களில் அத்தியாவசியம் என்றாலும் அதன் உபயோகிக்கும் மக்கள் நாளுக்கு நாள் அதற்கு அடிமையாகி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், சீனப் பெண் ஒருவர் தனது மொபைல் போனை மாற்றி ரூ.1 லட்சம் சம்பாதித்தது தற்போது பலரது கவனத்தை ஈர்த்த்ள்ளது.
இந்த போட்டியில், இளம்பெண்கள் உட்பட 10 பேர் கலந்து கொண்டனர். இதில், பகல் நேரம் முழுக்க 8 மணிநேரம் செல்போனே பார்க்கக் கூடாது, மேலும் செல்போன் இல்லாமல் எந்த பதற்றமும் பதைபதைப்பையும் காட்டாமல் இருக்க வேண்டும். தூங்கவும் கூடாது.
பெண்
என்பதே இந்தப்போட்டியின் முக்கிய விதி. போட்டியாளர்களுக்கு உணவு, குடிநீர் ஆகியவை அவர்கள் இருப்பிடதிற்கே வந்தது. அவர்களது வேலை சும்மா இருப்பதுதான். இடையில் அவ்வப்போது இயற்கை உபாதைகளுக்காக செல்லலாம்.
இதில் கலந்துக்கொண்ட பத்து பேர்களில் சிலர் புத்தகத்தைப்படித்துக்கொண்டும் சிலர் கண்களை மூடிக்கொண்டும் இருந்தனர். இருப்பினும் செல்போன் இல்லாததால் பலபேர் இந்த போட்டியை விட்டு வெளியேறியுள்ளனர்.
கடைசியாக டோங் என்ற ஒரு பெண், விதிகள் படி 8 மணி நேரம் செல்போன் பார்க்காமல் இருந்ததால் பரிசுத்தொகையான ரூ. 1.16 லட்சத்தினை தட்டிச் சென்றார். இந்த நிலையில், டோங், எந்நேரமும் மொபைலை நோண்டிக் கொண்டிருப்பதில்லை. இந்தப் போட்டியில் அவர் பைஜாமா அணிந்து பங்கேற்றதால் எளிமையாக இருந்துள்ளது.