மறையாத காதல்; 60 வருஷத்திற்குப் பின் - 78 வயதில் பள்ளி தோழிக்கு ப்ரபோஸ் செய்த முதியவர்!

United States of America
By Sumathi Jul 09, 2023 06:53 AM GMT
Report

63 ஆண்டுகள் கழித்து முதியவர் ஒருவர் தனது பள்ளி தோழிக்கு ப்ரபோஸ் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறையாத காதல்

அமெரிக்கா, கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தாமஸ் மெக்மேகின் மற்றும் நான்சி கம்பேல். பள்ளி பருவத்தில் ஒன்றாக படித்த போது இவர்கள் இருவருக்கும் இடையே ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு இருந்துள்ளது.

மறையாத காதல்; 60 வருஷத்திற்குப் பின் - 78 வயதில் பள்ளி தோழிக்கு ப்ரபோஸ் செய்த முதியவர்! | 78 Year Old Man Propose School Crush After 63 Year

பிறகு கல்லூரி முடித்து திருமணம் என இருவரும் வெவ்வேறு இடங்களில் செட்டில் ஆகிவிட்டனர். பல வருடங்கள் கழித்து பள்ளி படிப்பு முடித்து 50 வது ஆண்டில் மீண்டும் படித்த மாணவர்கள் எல்லாம் ஒன்றாக கூடியிருக்கிறார்கள்.

நெகிழ்ச்சி சம்பவம்

அப்போது இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது இருவருக்குமே தனித்தனியே குடும்பம் என செட்டில் ஆனதால் பெரிதாக எதையும் பேசிக்கொள்ளாமல் பிரியா விடை கொடுத்து சென்றுவிட்டனர். மீண்டும், 10 ஆண்டுகளுக்குப் பின் 60 வது ரியூனியன் நிகழ்ச்சியில் மீண்டும் சந்தித்து இருக்கிறார்கள்.

மறையாத காதல்; 60 வருஷத்திற்குப் பின் - 78 வயதில் பள்ளி தோழிக்கு ப்ரபோஸ் செய்த முதியவர்! | 78 Year Old Man Propose School Crush After 63 Year

அப்போது, இருவருமே குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்ததால் திருமணம் செய்துக்கொள்ள தோன்றியுள்ளது. தொடர்ந்து, தம்பா விமான நிலையத்திற்கு கம்பெல்லை வர சொன்ன மெக்மேகின் சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக தனது காதலை புரபோஸ் செய்தார். இந்தச் சம்பவம் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.