தலையில் 77 ஊசிகளுடன் இருந்த பெண்..மிரண்டுபோன மருத்துவர்கள் - வெளியான பகீர் தகவல்!
பெண்ணின் தலையில் 77 ஊசிகள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
77 ஊசிகள்
ஒடிசா மாநிலம் போலாங்கிர் பகுதியை சேர்ந்தவர் ரேஷ்மா பெஹாரா (19). இவருக்கு அடிக்கடி உடல்நல குறைபாடு ஏற்பட்டு அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவரது தாய் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு தான் இவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கடந்த 2021ம் ஆண்டு மந்திரவாதியை சந்தித்து சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். அதன் பிறகு, சில காரணங்களால் ரேஷ்மாவுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருந்து வந்துள்ளார்.
பகீர் தகவல்
இந்த நிலையில், ரேஷ்மாவுக்கு திடீரென தலையில் தாங்க முடியாத அளவுக்கு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள்பரிசோதனை செய்தபோது, அந்த தலைப்பகுதியை ஸ்கேன் செய்து பார்த்தனர்.
அப்போது ரேஷ்மாவின் தலையில் ஊசிகள் இருப்பதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்து ஊசிகளை எடுத்தனர். இரண்டுமுறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டத்தில் ரேஷ்மா தலையில் இருந்த மொத்தம் 77 ஊசிகளை எடுத்தனர்.
அதிர்ஷ்டவசமாக ஊசி எதுவும் எலும்பு பகுதியில் சேதம் செய்யவில்லை. மாறாக தசையில் லேசாக காயங்கள் மட்டும் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் சிகிச்சை முடிந்து நலமுடன் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.