அதிகாலையில் அடிக்காத அலாரம்..கொத்து கொத்தாக மடிந்த உயிர்கள் - துருக்கியில் ஒலிக்கும் மரண ஓலம்!
நட்சத்திர விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 76 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
துருக்கி
துருக்கி நாட்டின் பொலு மாகாணத்தில் கிரான்ட் கர்த்தால் என்ற நட்சத்திர விடுதி செயல்பட்டு வருகிறது. தற்போது துருக்கியில் பள்ளி ,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டு இருக்கின்றனர்.
கிராண்ட் கார்தால் சொகுசு விடுதியில் ஏராளமான மக்கள் விடுமுறை காரணமாக தங்கள் குழந்தைகளுடன் 238 பேர் தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை நட்சத்திர விடுதியின் சமையலறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நீண்ட நாட்கள் வாழ ஆசை.. பாக்டீரியாவை உடலில் செலுத்திக்கொண்ட விஞ்ஞானி - ஆராய்ச்சியில் நடந்த பயங்கரம்!
அப்போது காற்றின் வேகம் காரணமாகவும் நட்சத்திர விடுதியில் பெரும்பாலான பொருள்கள் மரக்கட்டையால் செய்யப்பட்டதாலும் தீ மளமளவெனப் பரவியது. இதனால், விடுதியில் உள்ள அறைகளில் தங்கியிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.
அப்போது அறையில் தங்கியிருந்த மூவர் தீயில் சிக்காமல் இருக்க மாடியிலிருந்து கீழே குதித்தபோது உயிரிழந்தனர்.மேலும் தீக்காயம், மூச்சுத் திணறல் ஏற்பட்டு 76 பேர் உயிரிழந்தனர்.
தீ விபத்து
சிலர் அட்டைகள் மற்றும் போர்வைகளைப் பயன்படுத்தி கீழே குதித்து உயிர் தப்பினர். இதில் 50க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்கிற அச்சம் நிலவிவருகிறது.இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் நட்சத்திர விடுதியில் உள்ள தீ விபத்து அலாரம் செயல்படாதது தெரியவந்தது. மேலும் இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈட்டுப்பட்டுள்ளனர்.