பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதில் பணம் - முதலமைச்சர் அறிவிப்பு!
பொங்கல் பரிசாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு
புதுச்சேரி பொதுப்பணித் துறையில் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்துக்கொண்டு பணி ஆணைகளை வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
முதலமைச்சர் அறிவிப்பு
இந்த ஆண்டும் பொங்கல் பரிசாக 750 ரூபாய் குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக ரொக்கம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள புதுச்சேரி காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம்,
விலைவாசியை கருத்தில் கொண்டு 2000 ரூபாயை பொங்கல் தொகுப்பாக அறிவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.