கல்யாணம் செய்ய வந்த 71 வயது காதலி கொலை - எஸ்கேப் ஆன 75 வயது மணமகன்!

United States of America Marriage Crime Punjab
By Sumathi Sep 20, 2025 08:36 AM GMT
Report

71 வயது காதலியை, கூலிப்படை வைத்து 75 வயது நபர் கொலை செய்துள்ளார்.

காதலி கொலை 

அமெரிக்கா, சியாட் பகுதியைச் சேர்ந்தவர் ருபிந்தர் கவுர் பாந்தர்(71). இந்திய வம்சாவளியான இவர் விவாகரத்து பெற்று, அங்கு தனியாக வசித்து வந்தார்.

rupinder kaur pandher with girlfriend

இவருக்கு சமூகவலைதளம் மூலம் பிரிட்டனைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியரான சரஞ்சித் சிங் கிரேவால்75) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரும், மனைவியை விவகாரத்து செய்திருந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி, திருமண த்தை தன் சொந்த ஊரான பஞ்சாபின் லுாதியானாவில் நடத்த கிரேவால் முடிவு செய்தார். இதனையடுத்து ருபிந்தர் இந்தியா வந்தார். அடுத்த சில நாட்களில் அவர் மாயமானார். இதனால் சந்தேகமடைந்த அவரது சகோதரி கமலா, டெல்லியில் உள்ள அமெரிக்க துாதரகத்தின் உதவியை நாடினார்.

மனைவிக்கு வருமானம் அதிகம் இருந்தால் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டாம்!

மனைவிக்கு வருமானம் அதிகம் இருந்தால் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டாம்!

75 வயது நபர் மாயம்

தொடர்ந்து மாயமான ருபிந்தரை தேடும் பணி தீவிரமாக நடந்தது. கிரேவாலின் மொபைல்போனுக்கு வந்த அழைப்புகள் குறித்து விசாரித்தனர். அதன்மூலம், பஞ்சாபின் மல்காபட்டியைச் சேர்ந்த சுக்ஜித் சிங் சோன் என்பவரை பிடித்து விசாரித்ததில்,

கல்யாணம் செய்ய வந்த 71 வயது காதலி கொலை - எஸ்கேப் ஆன 75 வயது மணமகன்! | 75 Year Man Escape Kill 71 Year Girlfriend Punjab

கிரேவாலின் துாண்டுதலால், ருபிந்தரை கொன்று எரித்ததை ஒப்புக் கொண்டார். இதற்காக 50 லட்சம் ரூபாய் பேரம் பேசியதாகவும் தெரிவித்துள்ளார். திருமணத்துக்கு முன்பு ருபிந்தரிடம் இருந்து கிரேவால் அடிக்கடி பணம் வாங்கியுள்ளார்.

அதனை ருபிந்தர் திருப்பி கேட்ட நிலையில், சுக்ஜித் சிங்கை வைத்து, கிரேவால் அவரை கொன்று எரித்துள்ளார். தற்போது தலைமறைவாக இருக்கும் கிரேவாலை போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.